بسم الله الرحمن الرحيم
தோற்றம்
· அல்லாஹ்வின் அருளால் இக்கல்லூரி 1994/ 03 / 20 ஆம் திகதி
அன்று 20 மாணவர்களுடன் இரண்டு போதனா ஆசிரியர்களுடன் ஹிப்ழ் , கிதாப் என இரு பிரிவுகளுடன்
தொடங்கப்பட்டது.
· தற்போது 2016 இக்கல்லூரியில் ஹிப்ழ் பிரிவில் 12 மாணவர்களும்,
கிதாப் பிரிவில் 42 மாணவர்களும் குர்ஆன், சன்மார்க்க விடயங்களை கற்றுக்
கொண்டிருக்கின்றனர்.
·
ஹிப்ழ் பிரிவில் ஒரு உஸ்தாதும் , கிதாப் பிரிவில்
ஒன்பது உஸ்தாது மார்களும், க/பொத. சா/த பரீட்சைகளுக்கான பாடங்களுக்காக ஏழு ஆசிரியர்களும், கடமை புரிகின்றனர்.
அவ்வாறே க/பொத. உ/த கலைப் பிரிவிற்கான
பாடங்களும் நடைபெறுகின்றன.
கல்வித் திட்டங்கள்
· எதிர்கால இஸ்லாமிய அழைப்பாளர்களாக உருவாகும்
மெளலவிமார்களுக்கு ஷரீஆ பாடங்களுடன் தமிழ் , சிங்கள, ஆங்கில மொழித் தேர்ச்சிக்கான
விஷேட வேலைத்திட்டங்களுடன், மேலதிகமாக கணிணி தகவல் தொழினுட்ப பாடங்களையும்
அறிமுகம் செய்துள்ளோம்.
· இதுவன்றி, அஹதிய்யா, தர்மாச்சார்ய, அல் ஆலிம் 1, அல் ஆலிம்
11 போன்ற அரச பரீட்சைகளுக்காகவும் மாணவர்கள் நன்கு தயார் படுத்தப்படுகின்றனர்.
அடைவுகள்
· அல்ஹம்து லில்லாஹ், தற்போது இக்கல்லூரியில் இருந்து 68
ஹாபிழ்களும், 50 மெளலவிகளும் பட்டம் பெற்று வெளியாகி உள்ளனர். இவர்கள்
உள்நாட்டிலும் , வெளிநாட்டிலும் சன்மார்க்கப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
அவர்களில் சிலர் உயர்கல்விக்காக வெளிநாட்டுப்
பல்கலைக்கழகங்களுக்குச் சென்றுள்ளனர்.
செலவினம்
கல்வி அடங்கலாக அனைத்து விடயங்களுக்குமான எமது மாதாந்த
செலவுக்கு கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் 500000.00 ரூபா தேவைப்படுகின்றது. வருடாந்த
செலவு சுமார் அறுபது இலட்சத்தை 6000000.00 தொடுகிறது.
வருடாந்தச் செலவு
|
மாதாந்தச் செலவு
|
நாளாந்தச் செலவு
|
6000000.00 ரூபா
|
500000.00 ரூபா
|
16666.00
|
அல்லாஹ்வின் அருளால், புனித இஸ்லாத்தை பேணி வளர்ப்பதில்
ஆர்வம் கொண்ட நல்லுள்ளம் படைத்த தனவந்தர்கள், நலன் விரும்பிகளின் உதவி
ஒத்தாசையினால் இம்மத்ரஸா பல தடைகள், கஷ்டங்களைத் தாண்டி வெற்றிகரமாக இயங்கி
வருகின்றது. அல்ஹம்து லில்லாஹ்.
“உங்களில் நன்மையை ஏவி, தீமையை தடுக்கும் ஒரு கூட்டம் இருக்கட்டும்.”
என்ற அல்குர்ஆனின் போதனைக்கமைய முஸ்லிம் சமூகத்திற்கான
ஆலிம்களையும், ஹாபிழ்களையும் உருவாக்குவது முஸ்லிம் சமூகத்தின் தலையாய கடமையாகும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق